உள்ளுராட்சி சபை தேர்தல் சம்பந்தமான அறிவிப்பு
உலகம் விரையும் வேகத்திற்கேற்ப, நம் பிரதேசத்தின் போக்கினை மாற்றப் போகும் இளம் அரசியல்வாதிகளாக நாம் களம் காணப்போகின்றோம்.
இனியும் கட்சிகளுக்கு வர்ணம் பூசி, சின்னம் காட்டி, வாக்கு கேட்க இடம் கொடுக்கவும் முடியாது, தந்திரக் கட்சிகளுக்கு நம் மண்ணினை அடகு வைக்கவும் முடியாது.
இனி நம் மண்ணுக்கான தனித்துவக்கோஷத்தை தனியாக நின்று எழுப்புவதற்கான நேரம். தூய தேசத்திற்கான நேரம்.
நம் மண்ணில் இருந்து நம் நாட்டை நேசிக்கும் புதிய படையணிக்கு நாம் தலைமை கொடுப்பதற்கான காலம். நேர்மையான இளம் அரசியல்வாதிகளுக்கான காலம்.
டாக்டர் அப்துல் கலாம் சொன்னது போல, பெரிதாக கனவு காண்கின்றோம், அந்த கனவுகளைத் தூக்கி நிறுத்த உங்கள் முன் வருகின்றோம். நம் மண்ணுக்கான உரிமைகளையும், நம் சமூகத்திற்கான தனித்துவத்தையும், நம் நாட்டுக்கான கௌரவத்தினையும் இன, மத, மொழி பேதமின்றி கரைப்படியாத கொடியொன்றை ஏற்றிட உங்கள் முன் வருகின்றோம்.
புத்தளம் தொகுதியில் இருக்கும் ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் தைரியமாய் தனித்து களமிறங்கி, அதிகாரக் கதிரைகளை பெற்றெடுக்க வருகின்றோம்.
அரசியல் எனும் நீதி மையத்தில், மக்கள் எனும் நீதிபதிகளை நம்பி, நேர்மையாய் வருகின்றோம். ஓரத்தில் நின்று ஓய்வெடுக்க நேரமில்லை, போராளிகளே புறப்படுங்கள்! இது நமக்கான நேரம், பெற்றெடுப்போம் சாதிப்போம்.
விடிவு பிறக்குமென
ஆயிரங்களில் வாக்களித்தோம்
பின் பிறந்த விடிவு
பாம்பின் விஷம் என கண்டுகொண்டோம்
நரி ஆண்டு
நகைக்கும் புலி ஆண்ட
காட்டில் இனி
அரி ஆளும் காலம்
வெகு தூரமில்லை
ஏமாந்தோம்
ஏமாற்றப்பட்டோம்
இனி இல்லை ஏமாற்றம்!
https://www.facebook.com/CleanNationLanka/posts/1236006660144364