ஒரு அவசர தேவையை செய்து கொடுத்துள்ளோம்

சீனாவைவிட கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டது இத்தாலி தான். சொன்ன பேச்சை கேட்காமல் இத்தாலி மக்கள் அசால்ட்டாக இருந்ததால் ஏராளமான இழப்புகளை சந்தித்து வருகிறது. இத்தாலியில் கொத்து கொத்தாக விழும் மரணத்தை கண்டு உலக நாடுகளே பயந்துவிட்டன. அப்போதுதான் மனித உயிர்களை காக்க வேண்டும் என்பதற்காக கியூபா இத்தாலிக்கு தானாகவே வலிய சென்று உதவிகளை செய்ய தொடங்கியது.
பிறருக்கு உதவிகளை அளித்து உயிர்காக்கும் அளவுக்கு கியூபா ஒன்றும் பணக்கார நாடு இல்லை. இன்னமும் ஓர் ஏழை நாடுதான். ஆனால் ஒரு சில குறிக்கோள்களை வகுத்து அதற்குள் பயணித்து வருகிறது. உதவி செய்வதற்கு பணக்காரர்களாக இருக்கத்தேவையில்லை என்பதுதான் அடிப்படை. அதற்கு சிறந்த உதாரணம் கியூபா.
அந்த அடிப்படையில் புத்தளத்தில் இருக்கும் தூய தேசத்தை நோக்கி நகரும் சமூக பற்றாளர்கள் என்ற வகையிலேயே மருத்துவத்திற்கு தம்மால் முடியுமான ஒரு அவசர தேவையை அவசரமாக செய்து கொடுத்துள்ளோம். இந்த நிதியுதவியை அமைப்பின் பிரதித்தலைவர் சகோதரர் நஸீப் Naseef Awm மற்றும் சமூக விவகார பொறுப்பாளர் சகோதரர் பஸாம் Firdous Mohamed Fasam அவர்களும் இந்த உதவியினை புத்தளம் தள வைத்தியசாலைக்கு இன்று காலை கையளித்தார்கள்.
இந்த உதவியை முன் நின்று செய்த சமூக ஆர்வலர் சகோதரர் இபாம் மரிக்கார் Ifam Marikar அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். #CleanNation #lka #MP2025 #HealthCare