கல்லூரியின் அதிபர் பிரச்சினை சம்பந்தமாக
ஆரம்பத்தில் இருந்து மனித சமுதாயத்தில் கல்வியும் வாழ்ந்து வந்துள்ளது. மனிதராக பிறந்த ஒவ்வொருத்தரும் கல்வி வளர்ச்சியில் பல்வேறு கால கட்டங்களிலும் தமக்கு பொருத்தமானதை, தேவையானதை கற்றுக்கொண்டு வந்துள்ளார்கள்.
கல்வி என்பது குழந்தைகளை உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியலாளர்கள் கூற்றின் படி இளைய தலைமுறையினரை முறையாக வழிநடத்துவதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் பாடசாலை முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமன்றி சமூகத்திலே மாற்றத்தினை வழிநடத்துவதிலும் பிரதான பங்கு அதற்குறியது.
சமூகத்துக்கான விழுமியங்களை உருவாக்குவதிலும் சமூக மூலதனங்களை ஒற்றுமை, சகிப்புத்தன்மை, ஒருவரையொருவர் சார்ந்து வாழ்தல், நட்புணர்வு ஆகியவற்றை சமூக கட்டமைப்புக்குள் பலப்படுத்துவதிலும் பாடசாலையின் பங்களிப்பு முதன்மையானது மட்டுமல்ல முக்கியமானதும் கூட. நமக்கான சமூகத்தை நேர்மையாக்குவதிலும் நல்லொழுக்கத்திலும் ஆழமான நற்சிந்தனையும் அகலமான அறிவையும் ஏற்படுத்த அது மிக அவசியம் என்பதையும் மறுக்க முடியாது.
அந்த அடிப்படையில் புத்தளம் ஸாஹிரா Zahira College Puttalam கல்லூரியின் அதிபர் பிரச்சினை சம்பந்தமாக நமது இயக்கத்தின் நிலைப்பாடினை சமூகத்திற்கு முன்வைக்கின்றோம் #CleanNation #lka #Puttalam #Zahira