Justice for Ishalini

அநீதியை எவர் செய்தாலும் எதிர்ப்பவர்கள் என்ற வகையிலும், நீதியின் பக்கம் எப்போதும் இருப்பார்கள் என்ற வகையிலும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராகவும், இஷாலினியின் மர்மமான இறப்பின் விசாரணைகள் நேர்மையாகவும் நீதியாகவும் நடைப்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி நேற்று (30/07/2021) புத்தளம் கொழும்பு முகத்திடலில் புத்தளத்தில் உள்ள மாதர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து நடாத்திய அமைதியான போராட்டத்தில் நாமும் பங்குகொண்டதில் மகிழிச்சியடைகின்றோம்.

“கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?” என்ற வகையில் கேட்பதையும்; நாம் நம்புவதையும் பேசி பேசி குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பதையும், குற்றமற்றவர்களை தண்டிக்க முயற்சிப்பதையும் நம் சமூகமும் முதலில் நிறுத்த வேண்டும். கடந்த காலங்களில் சமூக சேவையாளர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் உடன்பட எத்தனையோ சம்பவங்களுக்கு நீதியான தீர்ப்புகள் வெளிவராத நிலையில், இந்த இஷாலியின் மர்மமான மரணத்திற்கும் நீதியான தீர்ப்புகள் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவசரப்படாமல் பொறுமை காப்பதே சிறந்தது.

சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்! #CleanNation #MP2025 #Injustice #Ishalini #ChildAbuse #Puttalam Photo Credits: Ahsan Mohamed Photography