வெட்டாளை அஸன்குத்தூஸ் பழைய மாணவர் சங்கத்தோடு இந்தக்கலந்துரையாடல்

மறைந்த தலைவர் மர்ஹும் கமர்தீன் அப்துல் பாயிஸ் அவர்களின் பாடசாலை என்பதாலோ என்னவோ இந்தப் பாடசாலையின் மீது எமக்கு எப்போதும் பெரும்காதல் இருந்துகொண்டே இருந்தது. அதன் விளைவாக 2012ஆம் ஆண்டு மரியாதைக்குரிய எம்.ஐ.ஏ. ரவூப் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் இருந்து இன்று வரை பாடசாலையின் முன்னேற்றத்திற்காக தொடர் பங்களிப்புகளை எங்களால் வழங்கமுடிந்தது.
புத்தளத்திற்கு பெருமை சேர்க்கும் புத்தளம் வெட்டாளை அஸன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் திரு இல்ஹாம் மற்றும் பிரதியாதிபர்கள் முன்னிலையில் அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தோடு நமது பிரதேசத்தின் எதிர்காலத்தைப் பற்றி கலந்துரையாடினோம். இந்தக்கலந்துரையாடலில் பாடசாலை அமைந்திருக்கும் பிரதேசத்தின் தன்மை பற்றியும், அந்த சூழலோடு பாடசாலையை முன்னேற்றிச்செல்வதற்கான வழிமுறைகள் பற்றியும் மிக ஆழமாக பேசப்பட்டது. எதிர்காலத்தில் பாடசாலைக்கு தேவையான உதவிகளை எவ்வாறு பெற்றுக்கொள்ளுதல், ஏனைய வெளியூர் பாடசாலைகளோடு எவ்வாறு தொடர்பை ஏற்படுத்தி கொள்ளுதல், பாடசாலைக்கென ஒரு தனித்துவத்தை எப்படி உருவாக்கிக்கொள்ளுதல் போன்ற பல விடயங்களை அரசியலுக்கு அப்பால் பேசிக்கொள்ள முடிந்தது.
ஆழமாக சிந்திக்கக்கூடியவர்கள், வித்தியாசமாக பிரச்சினைகளுக்கு ஆரோக்கியமான தீர்வுகளை பெறக்கூடியவர்கள், எதிர்காலத்தை கணித்து வெள்ளம் வரும் முன்பு அணைக்கட்டக்கூடியவர்கள் நம் இளம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்றும், அவர்களை இனம் கண்டு மக்கள் அவர்களிடம் சமூகப்பதிவிகளை கொடுத்தால் சமூகத்தின் விடிவினை அவசரமாக அவர்களால் இழுத்துவரமுடியும் என்பதையும் தெளிவுபடுத்தினோம்.
இந்த இருபக்க கலந்துரையாடல் இயற்கையை பற்றிப்பிடித்த பழைய மாணவர் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சூழலுக்கு பாதிப்பில்லாத வகுப்பறையில் நமது அமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் பங்குபற்றுதளோடு நடைப்பெற்று முடிந்தது.
පුත්තලමට ආඩම්බරයක් එක් කරමින් පුත්තලම වෙට්ටාලෛ අසන්කුද්දූස් රජයේ මුස්ලිම් විද්යාලයේ විදුහල්පති ඉල්හාම් මහතා සහ නියෝජ්ය විදුහල්පති මධ්යයේ ආදි ශිෂ්ය සංගමය සමඟ අපේ ප්රදේශයේ සහ පාසලේ අනාගතය ගැන සාකච්ඡා කළෙමු.
Puttalam Vettalai Asankuttus Government Muslim School is one of the pride of Puttalam. We had a fruitful discussion with the principle Mr. Ilham and Vice Principles along with the members of Old Boys Association of the School. We talked about the future of the school and its surrounding area. #Puttalam #Education #School #FuturePlans #Youths #2025 #Vision2040