ஏப்ரல் 8ஆம் போராட்டம் சம்பந்தமான ஊடக அறிக்கை
PRESS RELEASE – 07th of April 2022
நாளை நடைப்பெற இருக்கும் போராட்டம் எமது இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். இந்த போராட்டம் புத்தளம் மாவட்ட இளைஞர் ஒன்றியத்தினால் முழுமையாக ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த இளைஞர் ஒன்றியத்தில் எல்லா அரசியல் கட்சியை மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யும் குழுவில் நமது இயக்கத்தின் அங்கத்தவர்களும் இருக்கிறார்கள், ஆகவே இந்த போராட்டத்தை மக்கள் மயப்படுத்தும் வேலையை நாம் சரியாக செய்திருக்கிறோம். தொடர்ந்தும் செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
ஏனைய சமூக அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் தங்களுடைய பெயரை முன்னிறுத்தி இந்த போராட்டத்திற்கு அழைப்புவிடுக்க முடியாது என்பதற்காக, நாம் இந்த போராட்டத்தை எங்களுடைய அமைப்பின் உறுப்பினர்களையும் எம்மை மதிக்கும் இயக்க ஆதரவாளர்களையும் அழைக்க முடியாது என்று எவருக்கும் சொல்ல முடியாது.
சமூக வலைத்தளத்திலும், சமூக ஊடகத்திலும் எமது அழைப்பிற்கு வித்தியாசமான வியாக்கியானம் கொடுப்பவர்கள் எங்கள் இயக்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவோ அல்லது எம் அரசியல் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாதவர்களாகவோ அல்லது இந்த போராட்டத்தின் அடிப்படையை புரியாதவர்களாகவோ தான் இருக்கிறார்கள். இவர்களுக்காக நாம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எங்களால் முடியுமான பங்களிப்பை கொடுக்காமல் இருக்க முடியாது ஆகவே போராட்டத்திற்கான ஏற்பாடுகளை பற்றிய சந்தேகங்களை ஏற்பாட்டு குழுவினை அணுகி (0768551330) அழைத்து அறிந்துகொள்ளலாம்.
ஆகவே இன்று இரவு இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யும் குழு மக்கள் மத்தியில் சில விஷமிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்ற சந்தேகங்களுக்கான தெளிவான பதில்களை அறிவிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இன மத மொழி கட்சி பேதமின்றி நடைப்பெற போகும் இந்த போராட்டத்திற்கு நம் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளை களைந்து இந்த நாட்டை நேசிக்கும் குடிமகனாக கலந்துகொள்வார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே இந்த நாட்டை நேசிப்பவர்களாக எங்களைப்போல கலந்துகொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
எஸ்.எம்.இஷாம் மரிக்கார்
தலைவர்
தூய தேசத்திற்கான இயக்கம்