சட்ட ஆலோசனை மற்றும் சட்டத்தரணிகளுக்கான கொடுப்பனவு உதவி

அதிகார அரசியலை நோக்கி கேள்வியெழுப்பும் வகையிலும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளுக்கு பதிலடி தரும் வகையில், அரசியல் விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் அரசியல் இயக்கம் என்ற வகையிலும் நாம் ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை.
கௌரவத்திற்குரிய நமது பாராளுமன்ற உறுப்பினரின் வீடு மற்றும் காரியாலயம் எரிக்கப்பட்ட சம்பவத்தோடு சம்பந்தப்படாதவர்கள் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டாலோ அல்லது விசாரணைக்காக அழைத்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ உடனடியாக எங்களது இயக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.
அநீதியை எதிர்க்கும் இயக்கம் என்ற அடிப்படையில் நாம் உங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனை மற்றும் சட்டத்தரணிகளுக்கான கொடுப்பனவு உதவிகளை முழுமையாக செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். எந்த வித குற்றம் செய்யாத நிரபராதிகள், அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நல்ல முயற்சியை நாம் செய்கின்றோம். #CleanNation #Justice #FightAgainstInjustice #Puttalam