Kalpitiya Hardball Cricket Ground

தனி மனிதர்களால் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவே முடியாது என்ற மனோநிலை நம் சமூகத்தில் ஆழமாக வளர்ந்திருக்கும் ஒரு உண்மையாகும்.
இந்த சிந்தனையை பொய்பிக்கும் வகையில் கல்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஹலான் அப்துல் ரஸ்ஸாக் Mohamed Haslan அவர்களால் 4 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட ஒரு காட்டுக்காணி, பல கஷ்டத்திற்கும், சதிகளுக்கும் மத்தியில் தனியாக நின்று சட்டப்படி போராடி 5ற்கும் மேற்பட்ட கிரிக்கட் கடினப்பந்து விளையாட்டுக்கழகங்கள் பயிற்சி பெரும் (Kalpitiya Hardball Cricket Ground) மைதானமாக மாற்றியமைக்கப்பட்டது.
அரசை ஏமாற்றி, அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து, லஞ்சம் கொடுத்து அரச காணிகளை அபகரிக்கும் ஊழல் நிறைந்த கயவர்களுக்கு மத்தியில், சமூகத்திற்காக இப்படியான ஒரு நற்செயலை அல் ஹமாஸா விளையாட்டுக்கழகத்தின் ஆரம்ப ஊக்குவிப்போடு செய்த Clean Nation தூய தேசத்திற்கான கல்பிட்டி பிரதேச தலைவர்களில் ஒருவரான சகோதரர் ஹலான் அப்துல் ரஸ்ஸாக் பாராட்டிடப்பட வேண்டியவரே.
அந்த வகையில் தன் தனி முயற்சியால் உருவான அந்த பொது மைதானத்தில் விளையாடும் அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்காக தூய தேசத்திற்கான அரசியல் இயக்கம் மூலமாக சில உதவிகளை செய்ததும் குறிப்பிடத்தக்கது. #Kalpitiya #CleanNation #Vision #NewLeaders