பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஜே.எம். ரிபாfய் உடனான சந்திப்பு
தூய தேசத்திற்கான அமைப்பினர் புத்தளம் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஜே.எம். ரிபாfய் Ajm Rifai அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள்.
கடந்த புத்தளம் பிரதேச சபையின் உள்ளுராட்சி தேர்தல்களின் போது பிரதித்தலைவர் பதவியை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட சகோதரர் ரிபாfய் அவர்களின் அரசியல் போராட்டம் தேர்தலில் வெற்றிபெற்றாலும், தேர்தலுக்குப் பின்னால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களால் மற்ற கட்சிக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டதன் மூலம் தோல்வியடைந்தது என்பதை அத்தேர்தலில் முழுமூச்சாக மர்ஹும் கே.ஏ.பாயிஸ் அவர்களோடு வேலை செய்தவர்கள் என்ற வகையில் நாம் அறிவோம்.
அந்த வகையில் சகோதரர் ரிபாfய் அவர்கள் ஆரம்பித்த போராட்டம் தொடரவேண்டும் என்றும் அவருடைய அரசியல் அதிகாரம் இந்த பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாக எதிர்காலத்திலும் அமைய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தினோம். தூய தேசம் என்ற வகையில் நமது இயக்கம் பற்றியும் அதன் கொள்கை பற்றியும் விரிவாகக் கலந்துரையாடிய பின்னர் அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலை நம் இயக்கத்திலிருந்து முகங்கொடுக்க வேண்டும் என்ற அழைப்பையும் கௌரவமாக விடுத்தோம்.
புத்தளம் கடற்கரை மண்ணுக்கு உள்ள அதே வரவேற்போடும், வஞ்சகம் இல்லாத புன்னகையோடும் மனம் திறந்து சுமார் 2 மணித்தியாலங்கள் உப்புக்கலந்த கடல் காற்றைச் சுவாசித்தவாறு கலந்துரையாடல் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. #CleanNation #Puttalam #Future #Unity
https://www.facebook.com/CleanNationLanka/posts/1197110947367269