புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலையில் கலந்துரையாடல்
நிர்வாகத்தினராலும் ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் திறன்பட நடாத்தப்பட்டுவரும் புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலையின் எதிர்கால வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்ட கலந்துரையாடல் ஒன்று பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களோடு பாடசாலையில் நடைப்பெற்றது. இந்தக்கலந்துரையாடலில் பாடசாலையின் எதிர்காலம் குறித்து மிகத்தெளிவாக பேசப்பட்டதோடு, தற்காலத்தில் பாடசாலையில் இருக்கும் தேவைகள்,எதிர்கால திட்டங்கள் மற்றும் நாட்டு சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிலைமைகள் பற்றிய தெளிவான பார்வை ஒன்றும் பாடசாலையின் அதிபர் அன்புக்குரிய ஆசிரியை பெல்ஜியா அவர்களால் தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் இந்த பாடசாலையில் வளர்ச்சியில் […]