Entries by cleannationpx

வெட்டாளை அஸன்குத்தூஸ் பழைய மாணவர் சங்கத்தோடு இந்தக்கலந்துரையாடல்

மறைந்த தலைவர் மர்ஹும் கமர்தீன் அப்துல் பாயிஸ் அவர்களின் பாடசாலை என்பதாலோ என்னவோ இந்தப் பாடசாலையின் மீது எமக்கு எப்போதும் பெரும்காதல் இருந்துகொண்டே இருந்தது. அதன் விளைவாக 2012ஆம் ஆண்டு மரியாதைக்குரிய எம்.ஐ.ஏ. ரவூப் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் இருந்து இன்று வரை பாடசாலையின் முன்னேற்றத்திற்காக தொடர் பங்களிப்புகளை எங்களால் வழங்கமுடிந்தது. புத்தளத்திற்கு பெருமை சேர்க்கும் புத்தளம் வெட்டாளை அஸன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் திரு இல்ஹாம் மற்றும் பிரதியாதிபர்கள் முன்னிலையில் அப்பாடசாலையின் பழைய […]

Media Conference – 10 October 2021

தேசிய அரசியலில் “புத்தளம்” என்ற வார்த்தை நீதி அமைச்சின் ஊடாகவும், முதல் சபாநாயகர் என்ற முக்கிய பதிவுகள் மூலமாகவும் பெருமை சேர்த்தது என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் இன்று இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் “புத்தளம்” என்ற வார்த்தையின் மானத்தை தேசிய மட்டத்தில் பாதிக்கும் வகையில் நடந்துகொண்டிருப்பது கவலையளிக்கின்றது. புத்தளம் மானத்தை தேசிய ரீதியில் மீண்டும் தூக்கி நிறுத்த அவர் முயற்சிக்க வேண்டும் என்பதே நமது தற்கால நம்பிக்கையாக இருக்கிறது. வழிகாட்டவும் உதவி என்பதையும் அரசியல் […]

உரிமையின் மறுபக்கம்

புத்தளம் மாவட்டத்தில் நிகழும் மரணங்களை நல்லடக்கம் செய்யும் வரைய உள்ள சட்ட திட்டங்கள் பற்றியும், தற்காலத்தில் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான தெளிவுகள் பற்றியுமான நேரலை நிகழ்ச்சி புத்தளம் மாவட்டத்தில் நிகழும் மரணங்கள் மற்றும் அதனை அடக்கும் வரை செய்யப்படவேண்டிய சட்ட நடைமுறைகள் பற்றி நாம் அறிந்துகொள்ளவும், அது சம்பந்தமான கேள்விகள் சந்தேகங்கள் இருப்பின் அதற்கான தெளிவுகளை பெற்றுக்கொள்வதற்காகவும் எங்களோடு கலந்துகொள்கின்றார் புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்தில் திடீர் மரண விசாரணை அதிகாரியாக செயல்பட்டுவரும் BM […]

Discussion with UNP

இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்று தான் ஐக்கிய தேசிய கட்சி. 1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. வரலாற்று நெடுகிலும் புத்தளம் தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சிக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட தேர்தல் தொகுதி என்றே சொல்லவேண்டும். தேர்தல் என்று வருகின்ற போது மக்கள் யானை என்கின்ற பலமான சின்னத்தை நேசித்தது போன்று வேறு எந்த சின்னத்தை நேசித்தது கிடையாது […]

Media Conference – 03 October 2021

எம் இனத்திற்காக, எம் மதத்திற்காக, எம் மொழிக்காக குரல் கொடுப்போம் என்று தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் வாய்கிழிய வாக்குறுதிகளை சொற்களால் அள்ளி எறிந்தவர்கள் இன்று அரசாங்கத்தின் பொட்டிப் பாம்புகளாய் அடங்கி இருப்பதை கண்டு வெட்கப்படுகிறோம். எதிர்க்கட்சி கதிரைகளில் இருந்துகொண்டு எதிர்கட்சிக்கு வலுசேர்க்காமல் ஜனநாயகத்திற்கு எதிராக அரசின் அநீதிகளுக்கு ஆடுகளம் அமைத்துக் கொடுக்கும் இவர்களும், இவர்களை தண்டிக்காத கட்சி தலைமைகளும் மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானவர்களே. අපේ ජාතියට, අපේ ආගමට සහ අපේ භාෂාවට දෙන බවට […]

வெளித்தொடர்புகளை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்

பொதுவாகவே ஒரு சிறிய வட்டத்திற்குள் இருப்பதாலோ என்னவோ நம் சிந்தனைகளும் குறுகியதாகவே இருக்கிறது, அதன் வெளிப்பாடே நம் முன்னால் தேர்தல் காலங்களில் தெரிவுகளாக வருபவர்களும் வெற்றி பெருபவர்களும் அவர்களின் நகர்வுகளை குறுகியதாகவே அமைத்துக்கொள்கின்றார்கள். இவற்றை மாற்ற வேண்டிய பொறுப்பு இன்றைய தலைவர்கள் என்ற வகையில் நமக்கு இருப்பதாக நாம் உணர்கின்றோம். அதனடிப்படையில் புத்தளம் மாவட்டத்தின் வர்த்தக துறையில், கல்வித்துறையில் மற்றும் அரசியல் துறையில் வெளித்தொடர்புகளை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் […]

Justice for Ishalini

அநீதியை எவர் செய்தாலும் எதிர்ப்பவர்கள் என்ற வகையிலும், நீதியின் பக்கம் எப்போதும் இருப்பார்கள் என்ற வகையிலும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராகவும், இஷாலினியின் மர்மமான இறப்பின் விசாரணைகள் நேர்மையாகவும் நீதியாகவும் நடைப்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி நேற்று (30/07/2021) புத்தளம் கொழும்பு முகத்திடலில் புத்தளத்தில் உள்ள மாதர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து நடாத்திய அமைதியான போராட்டத்தில் நாமும் பங்குகொண்டதில் மகிழிச்சியடைகின்றோம். “கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?” என்ற வகையில் கேட்பதையும்; நாம் நம்புவதையும் பேசி பேசி குற்றவாளிகளை […]

கல்பிட்டி கிளை உறுப்பினர்களை சந்தித்தார் ஹெக்டர் அப்புஹாமி

பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி Hector Appuhamy அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நமது இயக்கத்தின் கல்பிட்டி கிளைப்பிரிவு அவரை தலைவர் அசாம் அவர்களின் வீட்டில் நேற்று சந்தித்தது. அந்த சந்திப்பில் கல்பிட்டி பிரதேசத்தில் இருக்கும் முக்கிய பிரச்சினைகளான கல்பிட்டி துறைமுகம் மற்றும் மின்சார துண்டிப்பு பற்றி பேசப்பட்டது. இவற்றுக்கான தீர்வுகளை பெற மக்கள் போராட்டங்கள் அவசியம் என்றும் பேசப்பட்டது. குறிப்பாக மறைந்த தலைவர் பாயிஸ் K.A.Baiz அவர்களின் மறைந்த (May 26) தினத்தை “புத்தளம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி தினமாக” […]

கரைத்தீவு கிளைப்பிரிவு ஹெக்டர் அப்புஹாமி சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நமது இயக்கத்தின் கரைத்தீவு கிளைப்பிரிவு அவரை இன்று சந்தித்தது. அந்த சந்திப்பில் வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் தற்கால அரசியல் போக்கு சம்பந்தமாக பேசப்பட்டது. குறிப்பாக மறைந்த தலைவர் பாயிஸ் அவர்களின் மறைந்த (May 23) தினத்தை “புத்தளம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி தினமாக” பிறக்கட்டும் செய்வதற்கான வேண்டுகோள் மற்றும் நமது பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்திற்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் அருவக்காடு குப்பை திட்டம் மற்றும் அதிகரித்து வரும் […]

Meeting with Honourable Hector Appuhamy MP

தூய தேசத்திற்கான (Clean Nation) இயக்கத்தின் பிரதிநிதிகள் கௌரவத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களை கடந்த ஜூலை 10ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பில் தூய தேசத்திற்கான இயக்கத்தின் பிரதி தலைவர் நஸீப் மற்றும் பல முக்கிய உறுப்பினர்கள் உட்பட புத்தளம் நகர சபையின் உறுப்பினர் தில்ஷான் மற்றும் சுது மல்லி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த சந்திப்பு இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களின் இல்லத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்றது. தூய தேசத்தின் […]