புதிய அரசியல்திகளின் தேவை

புதிய அரசியல்திகளின் தேவை பற்றி கல்பிட்டி சொந்தங்களோடு பகிர்ந்துகொண்ட பல விடயங்களில் ஒரு நிமிடத்தை மாத்திரம் உங்களுக்காக பகிர்ந்துகொள்கின்றோம்.
நம் சமூகத்தின் மாற்றத்தை இலக்குகளாய் சுமந்த தூய தேசத்திற்கான பயணத்தின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. #CleanNation #Puttalam #Kalpitiya

Kalpitiya Hardball Cricket Ground

தனி மனிதர்களால் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவே முடியாது என்ற மனோநிலை நம் சமூகத்தில் ஆழமாக வளர்ந்திருக்கும் ஒரு உண்மையாகும்.
இந்த சிந்தனையை பொய்பிக்கும் வகையில் கல்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஹலான் அப்துல் ரஸ்ஸாக் Mohamed Haslan அவர்களால் 4 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட ஒரு காட்டுக்காணி, பல கஷ்டத்திற்கும், சதிகளுக்கும் மத்தியில் தனியாக நின்று சட்டப்படி போராடி 5ற்கும் மேற்பட்ட கிரிக்கட் கடினப்பந்து விளையாட்டுக்கழகங்கள் பயிற்சி பெரும் (Kalpitiya Hardball Cricket Ground) மைதானமாக மாற்றியமைக்கப்பட்டது.
அரசை ஏமாற்றி, அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து, லஞ்சம் கொடுத்து அரச காணிகளை அபகரிக்கும் ஊழல் நிறைந்த கயவர்களுக்கு மத்தியில், சமூகத்திற்காக இப்படியான ஒரு நற்செயலை அல் ஹமாஸா விளையாட்டுக்கழகத்தின் ஆரம்ப ஊக்குவிப்போடு செய்த Clean Nation தூய தேசத்திற்கான கல்பிட்டி பிரதேச தலைவர்களில் ஒருவரான சகோதரர் ஹலான் அப்துல் ரஸ்ஸாக் பாராட்டிடப்பட வேண்டியவரே.
அந்த வகையில் தன் தனி முயற்சியால் உருவான அந்த பொது மைதானத்தில் விளையாடும் அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்காக தூய தேசத்திற்கான அரசியல் இயக்கம் மூலமாக சில உதவிகளை செய்ததும் குறிப்பிடத்தக்கது. #Kalpitiya #CleanNation #Vision #NewLeaders

உரிமையின் மறுபக்கம்

புத்தளம் மாவட்டத்தில் நிகழும் மரணங்களை நல்லடக்கம் செய்யும் வரைய உள்ள சட்ட திட்டங்கள் பற்றியும், தற்காலத்தில் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான தெளிவுகள் பற்றியுமான நேரலை நிகழ்ச்சி
புத்தளம் மாவட்டத்தில் நிகழும் மரணங்கள் மற்றும் அதனை அடக்கும் வரை செய்யப்படவேண்டிய சட்ட நடைமுறைகள் பற்றி நாம் அறிந்துகொள்ளவும், அது சம்பந்தமான கேள்விகள் சந்தேகங்கள் இருப்பின் அதற்கான தெளிவுகளை பெற்றுக்கொள்வதற்காகவும் எங்களோடு கலந்துகொள்கின்றார் புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்தில் திடீர் மரண விசாரணை அதிகாரியாக செயல்பட்டுவரும் BM ஹிஷாம். #Puttalam #CleanNation #lka

கல்பிட்டி கிளை உறுப்பினர்களை சந்தித்தார் ஹெக்டர் அப்புஹாமி

பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி Hector Appuhamy அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நமது இயக்கத்தின் கல்பிட்டி கிளைப்பிரிவு அவரை தலைவர் அசாம் அவர்களின் வீட்டில் நேற்று சந்தித்தது. அந்த சந்திப்பில் கல்பிட்டி பிரதேசத்தில் இருக்கும் முக்கிய பிரச்சினைகளான கல்பிட்டி துறைமுகம் மற்றும் மின்சார துண்டிப்பு பற்றி பேசப்பட்டது. இவற்றுக்கான தீர்வுகளை பெற மக்கள் போராட்டங்கள் அவசியம் என்றும் பேசப்பட்டது.
May be an image of 7 people, people sitting and indoor
குறிப்பாக மறைந்த தலைவர் பாயிஸ் K.A.Baiz அவர்களின் மறைந்த (May 26) தினத்தை “புத்தளம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி தினமாக” பிரகடனம் செய்வதற்கான வேண்டுகோள் ஒன்றும் இக்கூட்டத்தில் கொடுக்கப்பட்டது. அதே நேரம் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை மைய்யப்பத்தி, அனைத்து வீதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும் பேசப்பட்டது.
இந்த கூட்டத்தில் Clean Nation இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். #CleanNation #lka #Puttalam #Kalpitiya
May be an image of 7 people, people sitting and indoor
May be an image of 4 people, people sitting and indoor
May be an image of 1 person, sitting and indoor
May be an image of 1 person, sitting and indoor
May be an image of 7 people, people sitting and indoor