வண்ணாத்திவில்லு பிரதேச சபை என்பது புத்தளம் மாவட்டத்தில் மிக முக்கியமான இயற்கை வளங்களை கொண்ட சபையாகும். 16 உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கும் பிரதேச சபையில் கரைத்தீவு கிராமத்தை சேர்ந்தவர்களே அதிகமாக தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். இவர்களது முக்கிய கடமை அந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதும் பராமரிப்பதுமே.
ஆனால் கடந்த இரண்டு சபைகளில் இயற்கை வளங்கள் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டது மாத்திரமல்லாமல், தலைவர் பதவியும் பல்வேறு கட்சிகளின் தலையீட்டினால் நம்மவர்களிடன் இருந்து பறிபோனது கவலையளிக்கின்றது. அதே நேரம் கரைத்தீவு கிராமத்தின் அடிப்படை அபிவிருத்திகள் கூட மந்தமாகிபோன காலமும் இதுவாகவே இருக்கிறது.
குறிப்பாக அருவக்காழு குப்பைத் திட்டத்திற்கு எதிராக என்னதான் மக்கள் எதிர்த்து நின்றாலும், அதற்குரிய அத்தனை பொறுப்பையும் சுமந்து நிற்கும் இச்சபையின் ஒரு சில உறுப்பினர்களை தவிர ஏனைய உறுப்பினர்களும் தலைமையும் பொடுபோக்காவே இருந்துவந்திருக்கின்றது.
சமூக அக்கரையோடு அழுத்தக் குழுக்களாக அமைப்புகளாக சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்கள் முயன்றாலும் அது அரசியல் கட்சிகளின் வித்தைகளால் தவிடுபொடியாவது மட்டுமே எழுதப்படாத விதியா வியாபித்திருக்கின்றது.
ஆகவே அழுத்தக்குழு என்பதற்கு அப்பால் நேரடியாக அரசியலினுள் இறங்கி விளையாட வேண்டிய சூழ்நிலை இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அந்த அடிப்படையில் வருகின்ற 15ஆம் திகதி நடைப்பெற இருக்கும் வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பை தோல்வியடைய வைப்பதற்கான முன்னெடுப்புகளை நம் இளைஞர்கள்
Mohamed Atheek அவர்களின் தலைமையில் அரசியல் களத்தில் முன்னின்று செய்து வருகின்றார்கள்.
பிரதேச சபையின் உறுப்பினர்களை சந்தித்து; “மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகின்ற சபை அமர்வில் நடைப்பெற இருக்கும் வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் மக்கள் பிரதிநிதிகளாக எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும், நாம் இழந்துதவிக்கும் (நாம் கட்டிக்காத்த) சபை தலைவர் பதவியை மீண்டும் பெற்றெடுக்கும் படியும்” இளைஞர்கள் பிரதிநிதிகளிடம் அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.
மக்கள் பிரதிநிதிகள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர, தமக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை புறம் தள்ளி கட்சிகளின் தலைமைகளுக்கு அடிமைகளாய் இருப்பதை உடனடியாக நிருத்தியாகவேண்டுடி இருக்கிறது என்பதை தெளிவாக நம் அமைப்பினர் தெரிவித்தார்கள்.
வருகின்ற சபையின் வரவு செலவு திட்டம் மீதான வாக்குடுப்பில் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
වනාතවිල්ලූව ප්රාදේශිය සභාව යනු පුත්තලම දිස්ත්රික්කයේ ඉතා වැදගත් ස්වභාවික සම්පත් සහිත සභාවකි¡ ප්රාදේශිය සභා මන්ත්රීවරු 16 දෙනා අතරින් අධික කාලයක් සභාපති වශයෙන් තනතුරු දැරුවේ කරතීව් ගම්මානය නියොජනය කළ මන්ත්රිවරුය. ඔවුන්ගේ ප්රමුඛතම යුතුකම එම ස්වභාවික සම්පත් ආරකෂා කිරීම හා සංරකෂණ කිරීමයි.
නමුත් පසුගිය සභාධුර කාල දෙකකදී ස්වභාවිත සම්පත් අවහරණයට ලක්වූ අතර සභාපති ධූරය ද විවිධ දේශපාලන පකෂවල මැදිහත් වීමෙන් අපේකෂ ගිලිහී යාම කානගාටු දායක දෙයකි¡ එසේම කරතිීව් ගම්මානයේ මූලික සංවර්ධන පවා මන්දගාමිව හැකි කාලය ද මෙයහි.
විශේෂයෙන්ම අරුක්කාලූ කසළ වියාපෘතියට එරෙහිව ජනතාව නැගී සිටිය ද එසදහා සියළු වගකීම දරා සිටින මෙම සභාවේ සමහර මන්ත්රීවරුන් හැර අනෙකුත් මන්ත්රීවරුන් හා නායකත්වය පවා උදාසීනව සිටිති.
සමාජය කෙරෙහි ඇති උනන්දුව නිසා සලපදම් කණ්ඩායම් ලෙස සමාජයේ දෙන විශාල වෙනසක් ඇතිකිරීමට තරුණ පිරිස උත්සහ කළ ද එය දේශපාලන පකෂවල සෙල්ලම් නිසා විනාශ වීම පමණක් ලියන නොලද ඉරණමක් ලෙස ව්යාප්ත වී ඇත.
එම නිසා බලපෑම් කණ්ඩායමට ඔඛෙන් සෘජුව දේශපාලනයට යොමුවීමට තරුණ පිරිසට අවශ්ය වී ඇත¡ එ අනුව ලබන 15 වන දින පැවැත්වීමට නියමිත වනාතවිල්ලූව ප්රාදේශිය සභාවේ දියවැය සදහා වන ඡන්ද විමසීම පරාජය කිරීම සදහා අපේ තරුණ පිරිස දේශපාලන පිටියේ උත්සහ කරමින් සිටිති.
ප්රාදේශිය සභාවේ මන්ත්රීවරුන් හමුවී ජනතා හැගීම්වලට ගරු කරමින් ඊලග සභා වාරයේදී පැවැත්වීමට නියමිත අයවැය පිළිබද ඡන්ද විමසීමේ දී මහජන නියොජිකයින් ලෙස විරුද්ධව ඡන්දය දිය යුතු බව ද අපෙන් අහිමිවී ගිය සභාපති ධූරය නැවත ලබා ගන්නා මෙන් ද තරුණ පිරිසකයින්ගෙන් කාරුණිකව ඉල්ලා සිටින ලදි.
මහජන නියෝජිකයින් මහජන හැගීම්වලට ගරුකරමින් ජනතා අවශ්යතා ඉටුකළ යුතු අතර තමන් තෝරා පත් කළ ජනතාවගේ හැගීම් නොසලකන පකෂවල නායකත්වයට වහල් වීම වහාම නිවැරදිකළ යුතු බව එම පිරිස පැවසුහ.
එළඛෙන සභාවේ දී දියවැය පිළිබද ඡන්ද විමසිමේ දී මහජන හැගීම්වලට ගරු කරමින් විරුද්ධව ඡන්දය දෙනු ඇතැයි අපි විශ්වාස කරමු.
https://www.facebook.com/CleanNationLanka/posts/1213542955724068