கரைத்தீவு கிளைப்பிரிவு ஹெக்டர் அப்புஹாமி சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நமது இயக்கத்தின் கரைத்தீவு கிளைப்பிரிவு அவரை இன்று சந்தித்தது. அந்த சந்திப்பில் வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் தற்கால அரசியல் போக்கு சம்பந்தமாக பேசப்பட்டது. குறிப்பாக மறைந்த தலைவர் பாயிஸ் அவர்களின் மறைந்த (May 23) தினத்தை “புத்தளம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி தினமாக” பிறக்கட்டும் செய்வதற்கான வேண்டுகோள் மற்றும் நமது பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்திற்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் அருவக்காடு குப்பை திட்டம் மற்றும் அதிகரித்து வரும் கேன்ஸர் நோயாளிகள் சம்பந்தமாக ஆழமாக பேசப்பட்டது.
இக்கூட்டம் நம் இயக்கத்தின் கரைத்தீவு பிரதேசத்தின் தலைவர் அதீக் அவர்களின் வீட்டில் நடைப்பெற்றதோடு, இதிலே சுமார் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இறுதியாக “தாங்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவர் என்ற உண்மையை உங்களது நகர்வுகளை வைத்து மக்கள் புரிந்துகொள்கின்றார்கள்” என்றும், “முஸ்லீம் மக்களின் ஆதரவு தேவையென்றால் அவற்றை மாற்றிக்கொள்வது பொருத்தமாக இருக்கும்” என்றும் தாழ்மையுடன் நம் சமூகம் சார்பாக வேண்டுக்கொண்டோம். #CleanNation #lka #Puttalam #Karaitivu