வெளித்தொடர்புகளை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்

பொதுவாகவே ஒரு சிறிய வட்டத்திற்குள் இருப்பதாலோ என்னவோ நம் சிந்தனைகளும் குறுகியதாகவே இருக்கிறது, அதன் வெளிப்பாடே நம் முன்னால் தேர்தல் காலங்களில் தெரிவுகளாக வருபவர்களும் வெற்றி பெருபவர்களும் அவர்களின் நகர்வுகளை குறுகியதாகவே அமைத்துக்கொள்கின்றார்கள்.
இவற்றை மாற்ற வேண்டிய பொறுப்பு இன்றைய தலைவர்கள் என்ற வகையில் நமக்கு இருப்பதாக நாம் உணர்கின்றோம். அதனடிப்படையில் புத்தளம் மாவட்டத்தின் வர்த்தக துறையில், கல்வித்துறையில் மற்றும் அரசியல் துறையில் வெளித்தொடர்புகளை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனை, மருதமுனை நகரத்தை சேர்ந்த நண்பர்களோடு நடைப்பெற்றது.
May be an image of 2 people, people sitting, people standing and indoor
இந்த அமர்வில் நமது நண்பரும், தொண்டு சேவையில் மிக தீவிர ஈடுபாட்டை கொண்டவரும், இலங்கையின் உற்பத்தியில் முக்கிய பங்கைபெரும் நெசவு தொழிலின் அதிபருமான மருதமுனையை சேர்ந்த முஹம்மத் சதீர் அவர்களும், அவரின் நண்பர் அரசியல் விமர்சகர் அப்ஸல் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
இவர்களோடு புத்தளத்து விடயங்களை சமூக சேவையாளரும் தொழிலதிபருமான முஹம்மத் ஹம்தான் மற்றும் நம் இயக்கத்தின் தலைவர் SM Isham Marikar இஷாம் மரிக்கார் அவர்களும் பகிர்ந்துகொண்டார்கள். #CleanNation #Puttalam #Maruthamunai #MP2025