தனி மனித பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது நாகரிகமான செயல் அல்ல
அண்மைய தினங்களில், புத்தளம் தில்லையடி பிரதேசத்தில் இந்து ஆலயம் ஒன்றில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்ட போது, ஒரு முஸ்லிம் பெண்மணி, புத்தள முஸ்லிம் சமூகம் குறித்து தெரிவித்த தனிப்பட்ட கருத்து ஒன்று காணொளியாக வெளிவந்து புத்தள சமூகத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.
அந்த வகையில் மேற்படி காணொளியில் தோன்றிய, தனது சமூகம் குறித்து விரக்தி நிலையில் காணப்பட்ட பெண்மணியுடன் கலந்துரையாடி விளக்கங்கள் வழங்கப்பட்ட அதேவேளை, குறித்த பெண்மணி தனது செயல் குறித்து வருந்துவதாகவும், தனது பொறுப்பற்ற செயலின் மூலம் புத்தள முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்பட்டுள்ள இழுக்குக்காக மன்னிப்பு கேட்பதாகவும் எதிர்வரும் காலங்களில் அவ்வாறான தவறுகள் நடக்காமல் இருக்க தான் பொறுப்பு கூறுவதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த விடயத்தில், குறித்த பெண்மணியின் செயலுக்கு காரணமாக அமைந்த மனித மனதின் பலவீனங்களை புரிந்துணர்வு கொண்டு அவரது மன்னிப்பு கோரலை ஏற்றுக்கொள்வோம்.
மேற்படி, தவறுகள் சில நிகழ்ந்த போதும், குறித்த இந்து ஆலயத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் மனித நேய செயற்பாடுகளை நாம் ஆதரிப்பதுடன் மேற்படி செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறவேண்டும் என்பதுவே எமது அவாவுமாக இருக்கின்றது. ஒரு இந்து அலாயம் என்ற வகையில், உங்களது ஆலயத்தினால் வழங்கப்படும் உலர் உணவுப்பொதிகளை தமது வறுமையின் காரணமாக வாங்க வந்த எளிய மக்களின் உணர்வுகளை, இவ்வாறான காணொளியின் மூலம் சமூக வலைத்தளங்களில் சமூகமயப்படுத்துவது என்பது சற்றும் ஏற்புடைய விடயம் அல்ல என்பதையும், தனி மனித பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது நாகரிகமான செயல் அல்ல என்பதையும் குறிப்பிட்டு தெளிவான கடிதம் ஒன்று தில்லையாடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் குருக்கள் மரியாதைக்குரிய தியாகராஜ அவர்களுக்கு ஒரு தெளிவான விளக்கத்தின் பிற்பாடு நம் அமைப்பின் முக்கிய பொறுப்புக்களை சுமக்கும் சகோதரர் பவ்ஸான் Mohamed Fawsan அவர்களால் கையளிக்கப்பட்டது.
இந்த கடிதத்தின் பிரதி ஒன்று புத்தளம் மாவட்ட சர்வம் மத குழுவிற்கு, அவ்வமைப்பின் சமத்தலைவர் புத்தளம் சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்களிடம் தூய தேசத்திற்கான இயக்கத்தினால் கையளிக்கப்பட்டது. #CleanNation #Puttalam #lk #2025MP #Unity #Diversity #Peace